ஆசிய ஜூனியர் செஸ்: தமிழக வீரர் ஹர்ஷவர்தன் தங்கம் வென்றார்


ஆசிய ஜூனியர் செஸ்: தமிழக வீரர் ஹர்ஷவர்தன் தங்கம் வென்றார்
x

கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்கான முதலாவது தகுதி இலக்கை தமிழக வீரர் ஹர்ஷவர்தன் எட்டினார்.

சென்னை,

ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்சில் நடந்தது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் தோல்வியை சந்திக்காத தமிழக வீரர் ஹர்ஷவர்தன் 7 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

அத்துடன் அவர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்கான முதலாவது தகுதி இலக்கை எட்டினார். ஹர்ஷவர்தன் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.


Next Story