ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்


தினத்தந்தி 3 Oct 2023 12:57 AM GMT (Updated: 3 Oct 2023 2:28 PM GMT)

ஆசிய விளையாட்டு தொடரின் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு தொடரில் 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Live Updates

  • 3 Oct 2023 9:23 AM GMT

    கபடி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா

    ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இன்று பெண்கள் கபடி ஆட்டமும் நடைபெற்றது. குரூப் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென்கொரியாவும் மோதின. இப்போட்டியில் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 56-22 என்ற புள்ளிகள் கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

  • 3 Oct 2023 8:29 AM GMT

    கபடி:

    கபடி பெண்கள் அணி பிரிவு ஏ போட்டி 3ல் இந்தியா - தென்கொரியா மோதி வருகின்றன. இப்போட்டியில் முதல் பாதி நிறைவடைந்த நிலையில் 11-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

  • 3 Oct 2023 8:18 AM GMT

    சாப்ட் டென்னிஸ்:

    சாப்ட் டென்னிஸ் ஆண்கள் குழு பிரிவு ஏ போட்டி 9ல் இந்தியா - கம்போடியா மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் கம்போடியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

  • 3 Oct 2023 8:09 AM GMT

    பேட்மிண்டன் 

    பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் ரவுண்ட் ஆப் 32 போட்டி 6ல் இந்தியா - மாலத்தீவு மோதின. இப்போட்டியில் 21-14, 21-12 என்ற நேர் செட்களில் மாலத்தீவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் காயத்ரி கோபிசந்த், டிரிசா ஜாலி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

  • 3 Oct 2023 7:47 AM GMT

    வில்வித்தை:

    வில்வித்தை ரிகர்வி ஆண்கள் தனிநபர் காலிறுதி சுற்றில் இந்தியா - கஜகஸ்தான் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 6-5 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் திராஜ் பூமதேவ்ராவை வீழ்த்தி கஜகஸ்தான் வீரர் வெற்றிபெற்றார்.

    இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் பூமதேவ்ராவ் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

  • 3 Oct 2023 7:44 AM GMT

    வில்வித்தை:

    வில்வித்தை ரிகர்வி ஆண்கள் தனிநபர் காலிறுதி சுற்றில் இந்தியா - சீனா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 6-5 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் அதனு தாசை வீழ்த்தி சீன வீரர் அபார வெற்றிபெற்றார்.

    இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் அதனு தாஸ் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

  • 3 Oct 2023 7:35 AM GMT

    பேட்மிண்டன்:

    பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 32 பிரிவு போட்டி 7ல் இந்தியா - மங்கோலியா மோதின. இப்போட்டியில் 21-9, 21-12 என்ற நேர் செட்களில் மங்கோலிய வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சுனில் குமார் அபார வெற்றிபெற்றார்.

    பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 32 பிரிவு போட்டி 32ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் 21-17, 21-16 என்ற நேர் செட்களில் இந்திய வீராங்கனை அஷ்மிதாவை வீழ்த்தி இந்தோனேசிய வீராங்கனை மரிஷ்கா வெற்றிபெற்றார்.

    பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் ரவுண்ட் ஆப் 32 பிரிவு போட்டி 10ல் இந்தியா - மாலத்தீவு மோதின. இப்போட்டியில் 21-2, 12 -2 செட்களில் மாலத்தீவு அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் தனீஷா, அஸ்வினி இடம்பெற்றிருந்தனர்.

  • 3 Oct 2023 7:26 AM GMT

    சாப்ட் டென்னிஸ்:

    சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு சுற்று ஏ போட்டி 4ல் இந்தியா - ஜப்பான் மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஜப்பான் அபார வெற்றிபெற்றது.

    சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு சுற்று ஏ போட்டி 6ல் இந்தியா - வியட்நாம் மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் வியட்நாமை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 

  • 3 Oct 2023 7:10 AM GMT

    குத்துச்சண்டை:

    குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 5-0 புள்ளி கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை லவ்லி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் இறுதிப்போட்டிக்கு லல்வி தகுதிபெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய வீராங்கனை லவ்லிக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

  • 3 Oct 2023 6:31 AM GMT

    பதக்க பட்டியல்:

    ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.


Next Story