லைவ்: ஆசிய விளையாட்டு - 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா
10,000 மீட்டர் ஆடவர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ளது.
Live Updates
- 30 Sept 2023 7:57 PM IST
ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில் குரூப் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கோல் மழை பொழிந்தது. பாகிஸ்தானை 10-2 என்ற கணக்கில் வென்று இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- 30 Sept 2023 7:46 PM IST
பேட்மிண்டன்: ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவும் தென்கொரியாவும் மோதின. இதில், இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணிக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதி செய்துள்ளது.
- 30 Sept 2023 7:07 PM IST
ஆடவர் ஹாக்கி: குரூப் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும் இந்திய அணியும் மோதி வருகின்றன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- 30 Sept 2023 6:47 PM IST
10,000 மீட்டர் ஓட்டம்:
ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் கார்த்திக் குமார் வெள்ளிப்பதக்கமும், குல்வீர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
- 30 Sept 2023 5:46 PM IST
டேபிள் டென்னிஸ்; மகளிர் இரட்டையர் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்திய அணிக்கு பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 30 Sept 2023 4:15 PM IST
ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம் வென்று இருந்தது. இந்த நிலையில், இன்று ஸ்குவாஷ் ஆடவர் பிரிவு ஆட்டத்தின் இறுதிப்போட்டி நடைபெற்றது. .இதில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. ஸ்குவாஷ் போட்டியில் ஆசியாவின் பலம் வாய்ந்த அணிகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் விளங்கி வருகின்றன.
இதனால், இன்று நடைபெற்ற போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மிகுந்த பரபரப்புடன் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவுக்காக முதலில் களம் இறங்கிய மகேஷ் மன்கோனகர் ஒரு செட்டில் கூட வெற்றி பெறாமல் 0-3என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். எனவே, அடுத்து வந்த இரண்டு வீரர்களுக்கும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சவாலான கட்டத்தில் களம் இறங்கிய இந்தியாவின் அனுபவம் வாய்ந்த வீரர் சவுரவ் கோஷல், பாகிஸ்தான் வீரரை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். அதன்பிறகு களம் இறங்கிய அபய் சிங், முதல் செட்டில் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து இரண்டு செட்களிலும் தோல்வி அடைந்தார். இதனால், இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், கடைசி இரண்டு செட்களிலும் அபய் சிங் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கடைசி செட் 10-10 என்று இருந்த போதும் அபய் சிங் விடா முயற்சியுடன் போராடி இந்தியாவுக்கு தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தார். இதனால், இந்திய அணி 2-1 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்க பதக்கத்தை கைப்பற்றியது.
- 30 Sept 2023 3:31 PM IST
ஸ்குவாஷ்: ஆடவர் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது.
- 30 Sept 2023 2:40 PM IST
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி
ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் குத்துச்சண்டை +92 கிலோ எடை பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் ஈரானின் இமானை எதிர் கொண்டு விளையாடிய இந்தியாவின் நரேந்தர் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். எனினும், இரண்டாவது சுற்றில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய நரேந்தர், ஈரான் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 30 Sept 2023 1:52 PM IST
குத்துச்சண்டை:
குத்துச்சண்டை ஆண்கள் 51-57 கிலோ பிரிவின் பிரிலிமினெரிஸ் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியா - குவைத் மோதின. இப்போட்டியில் குவைத் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சச்சின் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் சச்சின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.