லைவ்: ஆசிய விளையாட்டு - ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தல்
ஆசிய விளையாட்டு தொடரின் 15-வது நாளான இன்று மட்டும் இந்தியா 6 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
Live Updates
- 7 Oct 2023 6:51 AM IST
பதக்க பட்டியல்:-
ஆசிய விளையாட்டு தொடரில் 23 தங்கம், 34 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களை வென்று இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
- 7 Oct 2023 6:47 AM IST
வில்வித்தை:-
வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 149-145 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜோதி சூரிகா தங்கப்பதக்கம் வென்றார்.
- 7 Oct 2023 6:43 AM IST
வில்வித்தை:-
வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - இந்தோனேசியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 146-140 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அதிதி வெண்கலப்பதக்கம் வென்றார்.
- 7 Oct 2023 6:41 AM IST
பதக்க பட்டியல்:-
ஆசிய விளையாட்டில் 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
- 7 Oct 2023 6:40 AM IST
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு தொடரின் 15வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.