லைவ்: ஆசிய விளையாட்டு - ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தல்


தினத்தந்தி 7 Oct 2023 6:39 AM IST (Updated: 15 Oct 2023 6:31 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டு தொடரின் 15-வது நாளான இன்று மட்டும் இந்தியா 6 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு தொடரில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.




Live Updates

  • 7 Oct 2023 1:35 PM IST

    கிரிக்கெட்:

    ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

  • 7 Oct 2023 1:10 PM IST

    கபடி:

    கபடி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஈரான் மோதி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 17-13 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

  • 7 Oct 2023 11:43 AM IST

    கிரிக்கெட்:

    ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

  • 7 Oct 2023 10:52 AM IST

    மல்யுத்தம்:

    மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 86 கிலோ அரையிறுதி சுற்று போட்டி 293ல் இந்தியா - உஸ்பெகிஸ்தான் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 4-3 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் தீபக் புனியா அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 86 கிலோ இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா முன்னேறினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தீபக் புனியாவுக்கு குறைந்தப்பட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

  • 7 Oct 2023 10:47 AM IST

    வாலிபால்:

    வாலிபால் பெண்கள் கிளாசிபிகேஷன் 9 மற்று 10ம் இடத்திற்கான போட்டி 36ல் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் வாலிபால் பெண்கள் பிரிவில் இந்தியா 9ம் இடம் பிடித்தது.

  • 7 Oct 2023 10:43 AM IST

    ரோலர் ஸ்கேட்டிங்:

    ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஆர்டிஸ்டிக் ஒற்றையர் பிரி ஸ்கேட்டிங் லாங் புரோகிராம் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய் சும்கிதா 4ம் இடத்தையும், கிரிஷ்மா 6ம் இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் முதல் இடம் பிடித்த ஜப்பான் வீராங்கனை தங்கப்பதக்கத்தையும், 2 மற்றும் 3ம் இடம் பிடித்த சீன தைபே வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

  • 7 Oct 2023 10:38 AM IST

    மல்யுத்தம்:

    மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 74 கிலோ காலிறுதி சுற்று போட்டி 263ல் இந்தியா - தஜிகிஸ்தான் மோதின. இப்போட்டியில் 12-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் யாஷை வீழ்த்தி தஜிகிஸ்தான் வீரர் மகொமெட் அபார வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் யாஷ் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

  • 7 Oct 2023 10:22 AM IST

    சாப்ட் டென்னிஸ்

    சாப்ட் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டி 1ல் இந்தியா - சீன தைபே மோதின. இப்போட்டியில் 4-1 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் ஜெய் மீனாவை வீழ்த்தி சீன வீரர் யு சங் வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஜெய் மீனா அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

  • 7 Oct 2023 9:53 AM IST

    மல்யுத்தம்:

    மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 97 கிலோ 1/8 இறுதி சுற்று போட்டி 276ல் இந்தியா - கஜகஸ்தான் மோதின. இப்போட்டியில் 10-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் விக்கியை வீழ்த்தி கஜகஸ்தான் வீரர் அலிஷ்யர் அபார வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் விக்கி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

    மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 125 கிலோ 1/8 இறுதி சுற்று போட்டி 277ல் இந்தியா - கிர்கிஸ்தான் மோதின. இப்போட்டியில் 10-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சுமித்தை வீழ்த்தி கிர்கிஸ்தான் வீரர் அபார வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் சுமித் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

  • 7 Oct 2023 9:50 AM IST

    மல்யுத்தம்:

    மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 86 கிலோ காலிறுதி சுற்று போட்டி 233ல் இந்தியா - ஜப்பான் மோதின. இப்போட்டியில் 7-3 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் தீபக் புனியா அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 86 கிலோ அரையிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் தீபக் புனியா முன்னேறினார்.


Next Story