ஆசிய போட்டிக்கான இந்திய செஸ் அணி அறிவிப்பு
ஆசிய போட்டிக்கான இந்திய செஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சீனாவின் ஹாங்சோவில் வருகிற செப்டம்பர் 23-ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த நிலையில் கான்பூரில் இன்று நடைபெற்ற அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் (AICF) தலைவர் சஞ்சய் கபூர் தலைமையிலான பொதுக்குழு கூட்டத்தில் ஆசிய போட்டிக்கான செஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆசிய போட்டிக்கான இந்திய ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, அர்ஜூன் எரிகாசி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் பெண்கள் பிரிவில் கொனெரு ஹம்பி, ஹரிகா துரோனவல்லி, வைசாலி, வந்திக்கா அகர்வால், சவிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story