ஆசிய விளையாட்டு : கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு


ஆசிய விளையாட்டு : கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு
x
தினத்தந்தி 7 Oct 2023 11:55 AM IST (Updated: 7 Oct 2023 1:15 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டில் இன்று நடைபெறும் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

ஆசிய விளையாட்டு தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல, ஆப்கானிஸ்தான் அணி, தனது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதன்படி, இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

ஆப்கானிஸ்தான் : ஜுபைத் அக்பரி, முகமது ஷாஜாத், நூர் அலி சத்ரான், ஷாஹிதுல்லா கமால், அப்சர் ஜசாய், கரீம் ஜனத், குல்பாடின் நைப்(கேப்டன்), ஷரபுதீன் அஷ்ரப், கைஸ் அகமது, பரீத் அகமது மாலிக், ஜாஹிர் கான்

இந்தியா : ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், சாய் கிஷோர், அர்ஷ்தீப் சிங்


Next Story