ஆசிய விளையாட்டு போட்டிகள்: கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம் - இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு...!


தினத்தந்தி 23 Sept 2023 6:54 AM IST (Updated: 23 Sept 2023 9:37 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா சீனாவின் ஹாங்சோவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.


Live Updates

  • 23 Sept 2023 7:23 AM IST

    டேபிள் டென்னிஸ்; இந்தியா vs தஜிகிஸ்தான் ( ஆடவர் முதல் நிலை) இடையேயான ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

  • 23 Sept 2023 7:22 AM IST

    டேபிள் டென்னிஸ்; இந்தியா - நேபாளம் இடையேயான மகளிர் முதல் நிலை ஆட்டம் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது

  • 23 Sept 2023 7:14 AM IST

    தொடக்க விழா அணிவகுப்பில் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடியை ஏந்தி மிடுக்காக வலம் வருவார்கள். இந்த அணிவகுப்பில் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

  • 23 Sept 2023 6:56 AM IST

    ஆசிய கண்டத்தை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, இலங்கை, கத்தார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இது கடந்த போட்டிகளை விட அதிக எண்ணிக்கையாகும்.

  • 23 Sept 2023 6:55 AM IST

    ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழா ஹாங்சோவில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story