ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
படகு ஓட்டும் போட்டியில் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
Live Updates
- 19 Sept 2023 6:22 PM IST
இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோல் அடித்த சீனா
இரண்டாவது பாதியில் சீனா அணி ஒரு கோல் அடித்துள்ளது. இதனால் 2-1 என்ற கணக்கில் சீன அணி முன்னிலை பெற்றுள்ளது.
- 19 Sept 2023 6:14 PM IST
இந்தியா - சீனா இடையேயான கால்பந்து போட்டி
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 1-1 என்று சமனில் உள்ள நிலையில், இரண்டாவது பாதியில் சீன வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
- 19 Sept 2023 6:04 PM IST
கால்பந்து போட்டியில் சீனா 17வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. இதனால் முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின்னர், இரண்டாவது பாதியின் துவக்கத்தில், அதாவது 46வது நிமிடத்தில் இந்தியா பதில் கோல் அடித்து சமன் செய்தது. இந்த கோலை பிரவீன் அடித்தார்.
- 19 Sept 2023 5:51 PM IST
இந்தியா வெற்றி
கம்போடியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியில் இந்திய அணி, முதல் செட்டை 25-14 என்ற புள்ளி கணக்கிலும், 2வது செட்டை 25-13 என்ற புள்ளி கணக்கிலும், மூன்றாவது செட்டை 25-19 என்ற புள்ளி கணக்கிலும் கைப்பற்றியது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது.
- 19 Sept 2023 4:57 PM IST
கம்போடியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியில் இந்திய அணி 25-14 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது.
- 19 Sept 2023 4:52 PM IST
சீனாவுடன் மோத உள்ள இந்திய கால்பந்து அணி:
சுனில் சேத்ரி (கேப்டன்), குர்மீத் சிங், சந்தேஷ் ஜிங்கன், லால்சுங்னுங்கா, சுமித் ரதி, அப்துல் ரபீஹ், ஆயுஷ் சேத்ரி, அமர்ஜித் சிங், ராகுல் கே.பி., பிரைஸ் மிராண்டா, ரஹீம் அலி.
- 19 Sept 2023 4:45 PM IST
இந்திய ஆண்கள் வாலிபால் அணி
அமித், வினித் குமார், எஸ்.அம்மராம்பத், முத்துசாமி அப்பாவு, ரோஹித் குமார், மனோஜ் லட்சுமிபுரம் மஞ்சுநாதா, யு.மோகன், அஷ்வல் ராய், சந்தோஷ் சகாய அந்தோணி ராஜ், குரு பிரசாந்த் சுப்ரமணியன் வெங்கடசுப்பு, எரின் வர்கீஸ், ஹரி பிரசாத்
- 19 Sept 2023 4:42 PM IST
ஆசிய விளையாட்டு: இந்தியா-கம்போடியா வாலிபால் அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டம் தொடங்கியது.
- 19 Sept 2023 4:20 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி முறையாக கால்பதிக்கும் இந்திய நட்சத்திரங்கள்
இந்தியாவின் பல நட்சத்திர வீரர், வீராங்கனைகளுக்கு இதுவே கடைசி ஆசிய விளையாட்டு போட்டியாக இருக்கப்போகிறது. அவர்கள் பதக்கத்துடன் விடைபெறும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறார்கள்.