ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்


ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
x
தினத்தந்தி 27 Sept 2023 9:17 AM IST (Updated: 27 Sept 2023 9:53 AM IST)
t-max-icont-min-icon

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் அகியோர் கொண்ட இந்திய அணி 1,759 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.


Next Story