ஆசிய விளையாட்டு: குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா....!


தினத்தந்தி 26 Sept 2023 6:39 AM IST (Updated: 26 Sept 2023 8:34 PM IST)
t-max-icont-min-icon

குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

Live Updates

  • 26 Sept 2023 3:37 PM IST

    பதக்க பட்டியலில் 6ம் இடத்தில் இந்தியா...!

    ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்க பட்டியலில் இந்திய அணி 6ம் இடத்தில் உள்ளது. 3 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் இந்திய அணி 6ம் இடத்தில் உள்ளது.

    இந்திய அணி பதக்கம் வென்ற போட்டிகள், பட்டியல் விவரம்:-

    கிரிக்கெட் - 1 தங்கம்

    குதிரையேற்றம் - 1 தங்கம்

    துப்பு படகு போட்டி - 2 வெள்ளி, 3 வெண்கலம்

    துப்பாக்கி சூடுதல் - 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்

    மொத்த பதக்க விவரம்:-

    தங்கம் - 3

    வெள்ளி - 3

    வெண்கலம் - 6

    மொத்தம் - 12

  • 26 Sept 2023 3:06 PM IST

    குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா....!

    ஆசிய விளையாட்டில் குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சுதிப்தி ஹஜிலா, திவ்ய கீர்த்தி சிங், ஹர்டே ஷிடா, அனுஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி குதிரையேற்றம் போட்டி டிரஸ்ஏஜ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்ற போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.   

    மேலும் படிக்க... குதிரையேற்ற போட்டியில் 41 ஆண்டுக்கு பிறகு தங்கம்.. உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய அணி..!

  • 26 Sept 2023 1:35 PM IST

    ஆடவர்  டென்னிஸ்  மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் தோல்வியை தழுவினார். ஜப்பானின் யுசுகே வாட்னுகியிடம் 5-7, 7-6(3), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்த ராம்குமார் ராமநாதன் தொடரில் இருந்து வெளியேறினார். 

  • 26 Sept 2023 12:40 PM IST

    டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் இந்தியாவின் ருதுஜா போசாலே, பிலிப்பைன்ஸ் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

  • 26 Sept 2023 12:17 PM IST

     ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் மற்றும் கபடி, வாலிபால் அணியிணர் பெங்களூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்றனர். 



  • 26 Sept 2023 11:03 AM IST



  • 26 Sept 2023 10:42 AM IST

    ஜூடோ: மகளிர் 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மண் , சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறினார்

  • 26 Sept 2023 10:12 AM IST

    ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

  • 26 Sept 2023 9:50 AM IST

     நீச்சல் போட்டியில் 4*100 மெட்லே ரிலே பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


  • 26 Sept 2023 9:48 AM IST

    டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-2, 6-1 என்ற செட்கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.


Next Story