ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கல பதக்கம்
இந்தியாவின் கோவிந்த், சுமித், நரேந்தர் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.
ஜோர்டான்,
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறி இருந்ததால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் (குறைந்தது வெண்கலப் பதக்கம்) உறுதியாகி இருந்தன.
நேற்று பெண்களுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) கொரிய குடியரசின் சியோங் சுயோனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அதே போல் இந்தியாவின் அல்பியா பதான் (81+ கிலோ), மீனாட்சி (52 கிலோ), பர்வீன் ஆகியோரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ (75 கிலோ) தோல்வி அடைந்து வெண்கல பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் ஆடவர் பிரிவில் அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் கோவிந்த் குமார் சஹானி (48 கிலோ எடை பிரிவு), சுமித் (75 கிலோ), நரேந்தர் (92+ கிலோ) ஆகியோர் தங்களுடைய எடை பிரிவில் தோல்வி அடைந்து வெண்கல பதக்கம் வென்றனர்.