அகில இந்திய கபடி: தமிழக அணி ‘சாம்பியன்’
தபால் துறையினருக்கான 31–வது அகில இந்திய கபடி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
சென்னை,
தபால் துறையினருக்கான 31–வது அகில இந்திய கபடி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு–கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தமிழக அணி 36–18 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆந்திரா அணி 46–36 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தை சாய்த்தது. பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு தபால் துறை தலைவர் எம்.சம்பத் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயந்த் முரளி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். தபால்துறை அதிகாரிகள் சரதா சம்பத் (கோவை), ஆர்.ஆனந்த், வெங்கடேஸ்வரலு உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story