16 வயது தமிழக செஸ் வீரர் பிரனேஷ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்


16 வயது தமிழக செஸ் வீரர் பிரனேஷ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்
x

இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பிரனேஷ் பெற்றுள்ளார்.

ஸ்டாக்ஹோம்,

சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் (பிடே) ரில்டன் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்தது. இதில் 29 நாடுகளை சேர்ந்த 136 வீரர்கள் பங்கேற்றனர். 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரனேஷ் 8 புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

5 வயது முதல் செஸ் விளையாடி வரும் காரைக்குடியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவரான பிரனேஷ் ஏற்கனவே கிராண்ட்மாஸ்டர் தகுதிக்குரிய 3 இலக்குகளை எட்டி இருந்ததுடன் எலோ ரேட்டிங்கில் 2,500 புள்ளிகளை கடந்துள்ளார்.

இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ள பிரனேஷ், தமிழகத்தில் இருந்து உருவான 28-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவருக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.




Next Story