பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா...!


பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா...!
x

Image Courtesy: @TheHockeyIndia

தினத்தந்தி 5 Jun 2023 7:46 PM IST (Updated: 6 Jun 2023 2:33 PM IST)
t-max-icont-min-icon

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடந்து வருகிறது.

ககாமிகஹரா,

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் இந்தியாவுடன், தென்கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான், சீனத்தைபே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, கஜகஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி இன்று மலேசியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் மிக கடுமையாக போரடின.

இந்தியா தரப்பில் மும்தாஜ் கான் (10வது நிமிடம்), தீபிகா (26வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி ௨-௧ என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பிரிவு ஏ-வில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி தங்களது அடுத்த ஆட்டத்தில் நாளை கொரிய அணியை சந்திக்கிறது.


Next Story