மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி வெற்றி: வலியையும் சோகத்தையும் மறந்து இறுதிப் போட்டியில் அசத்திய மும்தாஜ் கான்


மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி வெற்றி: வலியையும் சோகத்தையும் மறந்து இறுதிப் போட்டியில் அசத்திய மும்தாஜ் கான்
x

 image courtesy;instagram _mumtaz_khan__9

தினத்தந்தி 16 Jun 2023 12:34 PM IST (Updated: 16 Jun 2023 12:35 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவை தோற்கடித்து இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்றது.

ஜப்பான்,

மும்தாஜ் கான் ஹாக்கி விளையாடி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று குழந்தையாக இருந்தபோதே ஆர்வம் காட்டினார்.ஆனால் அவரது தாயார் கெய்சர் ஜஹான் அதில் விருப்பமில்லை. மும்தாஜ் பிடிவாதமாக இருந்தார். அவரது சகோதரி பரா தான் மும்தாஜுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும்படி அவர்களின் தாயை சமாதானப்படுத்தினார்.

ஜப்பானில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மும்தாஜ் கான் முக்கிய பங்காற்றினார்.இந்த தொடரில் ஆறு கோல்களை அடித்துள்ளார். மேலும் கொரியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி இந்தியா முன்னிலை பெற உதவினார்.இந்திய அணி வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

பரிசளிப்பு முடிந்த பின் ஓட்டலுக்கு சென்ற மும்தாஜ் கான் முதலில் போன் செய்தது அவருடைய தாயாருக்கு தான். அவரது தாயார் அவருடைய அழைப்புக்காகக் காத்திருந்தார் எனவும் அணி வெற்றி பெற தினமும் பிரார்த்தனை செய்து உள்ளார்.

இதுகுறித்து மும்தாஜ் கான் கூறியதாவ்து:-

கடந்த உலகக் கோப்பை (ஜூனியர்ஸ் 2022) தோல்வி எங்கள் அனைவருக்கும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஆனால் இந்த முறை அம்மாவுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. அதனால் நான் வீடியோ கால் செய்தபோது, என் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர் நான் என் முகத்தை காட்டாமல், எனது பதக்கத்தை கேமரா முன் வைத்தேன். என் அம்மா மற்றும் சகோதரிகள் ஆனந்தக் கண்ணீருடன் அழத் தொடங்கினர். இது எனக்கு மிகவும் பெருமையான தருணம் என கூறினார்.

'அதே முழங்கால் அதே பிரச்சனை அதே போராட்டம் ' என்று தனது கடந்த கஷ்டகாலங்களை நினைவு கூர்ந்துள்ளார்.தனது முதல் ஏசிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்தால் எனது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன், இனி அணியுடன் விளையாடப் போக முடியாது என நான் பயந்துவிட்டேன். ஆனால் எனக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. எந்த காயமும் பெரிதாக இல்லை என இப்போது உணர்கிறேன். முதல் காயத்திற்குப் பிறகு நான் மீண்டும் வந்தேன், ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடி, கோல் அடித்தேன்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கடந்த காலத்தை விட்டுவிட்டு மீண்டும் குணமடைவதில் கவனம் செலுத்துவேன் என்று நான் உறுதி எடுதேன். உணவுமுறை,பயிற்சி மற்றும் பயிற்சியாளர்கள் சொல்வதைக் கேட்பது மூலம் மறுவாழ்வு பெற்றென்.

இப்போது, மீண்டு வந்துள்ளேனன் பதக்கத்துடன் என கூறி உள்ளார்.

சர்வதேச ஹாக்கியில் தொடர்ந்து தனது முத்திரையை பதிக்கத் தொடங்கும் மும்தாஜ் கானின் நோக்கம் எளிமையானது. . அவர் இந்த ஆண்டின் எப்ஐஎச் ரைசிங் ஸ்டாராகவும், 2022 ஆம் ஆண்டில் ஹாக்கி இந்தியாவின் வளர்ந்துவரும் சிறந்த வீரராகவும் இருந்தார்.


Next Story