சூப்பர் டிவிசன் ஆக்கி: தெற்கு ரெயில்வே-உணவு கழகம் ஆட்டம் 'டிரா'


சூப்பர் டிவிசன் ஆக்கி: தெற்கு ரெயில்வே-உணவு கழகம் ஆட்டம் டிரா
x

தெற்கு ரெயில்வே-இந்திய உணவு கழக அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சென்னை,

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே-இந்திய உணவு கழக அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தெற்கு ரெயில்வே அணியில் அஜித் குமார், பிரவீன் குமார் தலா ஒரு கோலும், உணவு கழக அணியில் ராஜா, புவியரசன் தலா ஒரு கோலும் அடித்தனர். ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி-ஏ.ஜி.அலுவலகம் இடையிலான மற்றொரு ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கலால் வரி அணியில் பியர் ஆலன் ராஜேஷ், பிரபு, ஏ.ஜி.அலுவலக அணியில் தாமு, வீரதமிழன் ஆகியோர் கோல் போட்டனர்.

மதுரையில் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடைபெறுவதால் இன்று முதல் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில் ஓய்வு விடப்பட்டுள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story