4 நாடுகள் போட்டியில் பங்கேற்பு: இந்திய ஜூனியர் ஆக்கி அணி ஜெர்மனி பயணம்


4 நாடுகள் போட்டியில் பங்கேற்பு: இந்திய ஜூனியர் ஆக்கி அணி ஜெர்மனி பயணம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 15 Aug 2023 2:33 AM IST (Updated: 15 Aug 2023 1:18 PM IST)
t-max-icont-min-icon

இந்த தொடருக்கான இந்திய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பெங்களூருவில் இருந்து நேற்று ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றனர்.

பெங்களூரு,

ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் போட்டியை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான இந்திய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பெங்களூருவில் இருந்து நேற்று ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்திய ஜூனியர் ஆண்கள் அணிக்கு விஷ்ணுகாந்த் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆண்கள் அணிக்கான போட்டிகள் வரும் 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

இந்திய ஜூனியர் பெண்கள் அணியை பிரீத்தி வழிநடத்த உள்ளார். பெண்கள் அணிக்கான போட்டி 19-ந்தேதி தேதி முதல் 23-ந்தேதி தேதி வரை நடக்கிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா ஜெர்மனியுடன் மோதுகிறது.

ஜூனியர் ஆண்கள் அணி கேப்டன் விஷ்ணுகாந்த் சிங் கூறுகையில், 'தரமான அணிகளுக்கு எதிராக இந்த தொடரில் விளையாடுவதை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள ஜூனியர் ஆக்கி ஆண்கள் உலகக்கோப்பைக்கு முன்னதாக எங்களை சோதனை செய்ய இந்த தொடர் உதவும்.இதன் மூலம் அணியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிய முடியும். இதற்கு நாங்கள் சிறந்த முறையில் தயாராகி உள்ளோம். அதனால் தொடரில் சிறந்த முடிவை எதிர்பார்க்கிறோம்' என கூறியுள்ளார்.

பெண்கள் அணி கேப்டன் பிரீத்தி கூறுகையில்,'பயிற்சி களத்தில் நன்றாக தயாராகி உள்ளோம். உலகக் கோப்பைக்கு முன்பாக வரும் போட்டி என்பதால் இதனை சிறந்த முறையில் முடிக்க முயற்சிப்போம். வீராங்கனைகளின் திறமைகளை அடையாளம் காண இந்த தொடர் உதவும்' என்று குறிப்பிட்டார்.


Next Story