இந்திய ஆக்கி அணிக்கு 2036-ம் ஆண்டு வரை ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா அரசு முடிவு


இந்திய ஆக்கி அணிக்கு 2036-ம் ஆண்டு வரை ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா அரசு முடிவு
x

Image Courtesy: @TheHockeyIndia

இந்திய ஆக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது.

புவனேஸ்வர்,

இந்திய ஹாக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை ஆக்கி, புரோ ஆக்கி லீக் போன்ற பெரிய போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

இதற்கிடையே, ஒடிசா மாநில அரசு தங்களது ஸ்பான்சர்ஷிப்பை 2033-ம் ஆண்டு வரை இந்திய ஆண்கள் - பெண்கள் ஆக்கி அணிகளுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) நீட்டிப்பது என முடிவு செய்தது. இந்த முடிவு ஒடிசாவின் அப்போதைய முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த ஏப்ரலில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஒடிசா மாநில அரசு இந்திய ஆக்கி அணியின் ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் தற்போதைய முதல் மந்திரி மோகன் சரண் மாஜி மற்றும் ஆக்கி இந்தியா குழுவினர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.


Next Story