தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; 7-வது நாள் லீக் சுற்று தமிழக அணி தோல்வி...!!


தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; 7-வது நாள் லீக் சுற்று தமிழக அணி தோல்வி...!!
x

image courtesy;twitter/@TheHockeyIndia

13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் ஓடிசா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பிஸ்ரா முண்டா ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஒடிசா,

தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 28 அணிகள் இடம் பெற்றுள்ளன.அவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.நேற்று 7-வது நாள் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் மராட்டியம் மற்றும் டெல்லி அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மராட்டிய அணி 6-2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை விழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.மராட்டிய அணியின் கேப்டன் ஹிமான்சி கவாண்டே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.இந்த தொடரில் ஆடிய 2 ஆட்டங்களிலும் மராட்டிய அணி வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் ஹரியானா மற்றும் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹரியானா அணி 10-4 என்ற கோல் கணக்கில் பெங்கால் அணியை விழ்த்தியது.ஹரியானா அணி தரப்பில் பிங்கி 4 கோல் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

மூன்றாவது ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ஒடிசா அணிகள் மோதின.இதில் ஒடிசா அணி 4-0 என்ற கோல் கணக்கில் தமிழக அணியை விழ்த்தியது.கடைசி வரை போராடிய தமிழக அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.ஒடிசா அணியின் கோல் கீப்பர் தமிழக அணியின் அனைத்து கோல் அடிக்கும் முயற்சிகளையும் அற்புதமாக முறியடித்தார்.


Next Story