இந்திய மகளிர் ஆக்கி அணி ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் தொடர்களுக்காக புறப்பட்டது..!!


இந்திய மகளிர் ஆக்கி அணி ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் தொடர்களுக்காக புறப்பட்டது..!!
x

image courtesy;twitter/@TheHockeyIndia

தினத்தந்தி 13 July 2023 12:33 PM IST (Updated: 13 July 2023 12:34 PM IST)
t-max-icont-min-icon

இந்திய மகளிர் ஆக்கி அணி, தங்களது ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்காக பெங்களூருவில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றது.

பெங்களூரு,

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி இந்த மாதத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி முதலில் ஜெர்மனிக்கு செல்ல உள்ளது.அங்கு இரண்டு ஆட்டங்களில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

இந்திய அணி லிம்பர்க் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் ஜூலை 16 அன்று சீனாவை எதிர்கொள்கிறது.அதன்பின், ஜூலை 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தை ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராக பயன்படுத்திக்கொள்ள உள்ளது.

ஜெர்மனி சுற்றுப் பயணத்திற்கு பின் இந்திய அணி ஜூலை 20-ஆம் தேதி ஸ்பெயின் ஆக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தும் மூன்று நாடுகளுக்கு இடைப்பட்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கு முதல் போட்டியில் ஜூலை 25-ஆம் தேதி ஸ்பெயினுடன் மோதுகிறது. அடுத்த ஆட்டங்களில் முறையே ஜூலை 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது..

இந்த தொடர்களுக்கான இந்திய அணிக்கு கோல் கீப்பர் சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக டீப் கிரேஸ் எக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பேசிய இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் சவிதா, "இந்த சுற்றுப்பயணத்தை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம். ஆசிய விளையாட்டுகளுக்கு முன்னதாக வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும். வரவிருக்கும் போட்டிகளுக்கு நாங்கள் தயாராகுவதற்கு இந்த போட்டிகள் எங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். கடந்த சில காலங்கலாக அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் நன்கு அறியப்பட்டதால் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் தொடர்களில் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்'' என கூறி உள்ளார்.

ஜெர்மனி தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை:

ஜூலை 16, இந்தியா - சீனா .

ஜூலை 18, இந்தியா - ஜெர்மனி .

ஜூலை 19, இந்தியா - ஜெர்மனி.

ஸ்பெயின் தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை

ஜூலை 25, இந்தியா - ஸ்பெயின் .

ஜூலை 27, இந்தியா- தென்னாப்பிரிக்கா .

ஜூலை 28, இந்தியா- இங்கிலாந்து.


Next Story