ஆக்கி தரவரிசையில் முன்னேறிய இந்தியா...முதல் இடத்தை இழந்த பெல்ஜியம்
ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில் ஆக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
புதுடெல்லி,
கடந்த இரு வாரங்களாக பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் விளையாட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இந்த தொடரில் ஆக்கி விளையாட்டில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. நெதர்லாந்து தங்கப்பதக்கத்தையும், ஜெர்மனி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது.
இந்நிலையில், ஆக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. இதில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியா (2848.67 புள்ளி) 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நெதர்லாந்து (3168.01 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. ஜெர்மனி (3035.28 புள்ளி) 2வது இடத்திலும், இங்கிலாந்து (2973.31 புள்ளி) 3வது இடத்திலும், ஒலிம்பிக்கிற்கு முன்னர் முதல் இடத்தில் இருந்த பெல்ஜியம் (2958.66 புள்ளி) 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.
Related Tags :
Next Story