ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்..!


ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்..!
x

Image Courtesy: @TheHockeyIndia

ஹாக்கி உலகக்கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன.

ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன. இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்றின் முதலாவது ஆட்டத்தில் மலேசியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால் முதல் இரு பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து நடைபெற்ற 3வது பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2 கோலும், மலேசியா 1 கோலும் அடித்தன. இதனால் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து கடைசி சுற்று ஆட்டத்தில் மலேசியா மேலும் ஒரு கோல் அடிக்க ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2 கோல் அடித்தன.

இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கு தலா 5 வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. இதில் இரு அணிகளும் 3 வாய்ப்புகளை கோலாக்கினர். இதையடுத்து சடென் டெத் முறை கடைப்பிடிக்கப்பட்டடது.

இதில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய மலேசியா வாய்ப்பை வீணடித்தது. ஆனால் ஸ்பெயின் அணி தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை கோலாகினர். முடிவில் 2-2 (4-3 பெனால்டி ஷூட்) முறையில் ஸ்பெயின் அணி மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.


Next Story