சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு விருதுகள்: வளர்ந்து வரும் வீராங்கனையாக இந்தியாவின் மும்தாஜ் கான் தேர்வு


சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு விருதுகள்: வளர்ந்து வரும் வீராங்கனையாக இந்தியாவின் மும்தாஜ் கான் தேர்வு
x

Image Courtesy: Twitter @FIH_Hockey

சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு, வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை மும்தாஜ் கானுக்கு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்திய மகளிர் சீனியர் ஆக்கி அணியின் வீராங்கனை மும்தாஜ் கான் 2021-22-க்கான வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார். இதற்கான முடிவுகளை இன்று அறிவித்த ஆக்கி கூட்டமைப்பு, வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை மும்தாஜ் கானுக்கு அறிவித்துள்ளது.

வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய மும்தாஜ் கான், "நான் இந்த விருதை வென்றதை என்னால் நம்ப முடியவில்லை. கடந்த ஆண்டு பயிற்சி மைதானத்தில் நான் மேற்கொண்ட கடின உழைப்பு ஒரு வீரராக என்னை மேம்படுத்த உதவியது என்பதற்கு இந்த விருதை ஒரு அடையாளமாக உணர்கிறேன்.

இந்த வருடத்தில் எங்கள் ஒட்டுமொத்த அணியின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது, வெற்றியை எனது அணிக்கு அர்ப்பணிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


Next Story