பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் 'டிரா'


பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா
x

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை டிரா செய்தது.

ஆம்ஸ்டெல்வீன்,

15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி, நேற்று தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 9-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் இசபெல்லா பீட்டரும், 28-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியாவின் வந்தானா கட்டாரியாவும் கோல் அடித்தனர். மேலும் சில பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய வீராங்கனைகள் வீணடித்து விட்டனர். இந்திய அணி அடுத்து சீனாவை நாளை சந்திக்கிறது.


Next Story