ஆசிய ஜூனியர் ஆக்கி - ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா


ஆசிய ஜூனியர் ஆக்கி - ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
x

ஆசிய கோப்பை மகளிர் ஜூனியர் ஆக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.

கமாமிகஹரா,

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் சீனா, முன்னாள் சாம்பியன் தென்கொரியா, இந்தியா, ஜப்பான் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

அதன்படி, இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.

குறிப்பாக, ஜப்பானை அதன் சொந்த மண்ணில் வென்று இந்தியா அசத்தியுள்ளது. அதே நேரத்தில் சிலியில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கும் இந்தியா தகுதிபெற்றது.


Next Story