ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? - தென்கொரியாவுடன் இன்று மோதல்


ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? - தென்கொரியாவுடன் இன்று மோதல்
x

ஆசிய கோப்பை ஆக்கி இன்றைய போட்டியில் இந்தியா தென்கொரியா அணிகள் இன்று மோதுகின்றன.

ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? - தென்கொரியாவுடன் இன்று மோதல்ஜகார்த்தா,

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் 'டிரா' கண்டது.

இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தற்போது தலா 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன. தென்கொரியாவை சாய்த்து இறுதிசுற்றை எட்டும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தயாராகி வருகிறார்கள். தோற்கும் அணிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது ஜப்பான்-மலேசியா இடையிலான மற்றொரு ஆட்டத்தின் முடிவை பொறுத்து தெரிய வரும்.

ஜப்பான் இரு ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்து விட்டது. மலேசியா 2 டிராவுடன் 2 புள்ளிகள் பெற்றிருக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்தியா-தென்கொரியா ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story