ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா - ஜப்பான் போட்டி 'டிரா'


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா - ஜப்பான் போட்டி டிரா
x
தினத்தந்தி 4 Aug 2023 5:18 PM GMT (Updated: 4 Aug 2023 5:26 PM GMT)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை, 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொரியா, பாகிஸ்தான் இடையிலான 2வது போட்டி சமனில் முடிந்தது. 2வது போட்டியில் மலேசியா சீனாவை 5-1 என வீழ்த்தியது.

இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 43வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில், 1-1 என போட்டி சமனில் முடிந்தது.


Next Story