ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி மலேசியா அணி அபார வெற்றி


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி மலேசியா அணி அபார வெற்றி
x

ஆட்ட நேர முடிவில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது.

இந்த நிலையில் இன்று இரவு நடைபெற்ற போட்டியில் சீனா - மலேசியா அணிகள் மோதின. தொடக்கம் முதல் மலேசியா அணி ஆதிக்கம் செலுத்தியது. சிறப்பாக விளையாடி அந்த அணி 5 கோல்கள் அடித்தது . சீனா அணி ஒரு கோல் மட்டும் அடித்தது.இதனால் ஆட்ட நேர முடிவில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story