ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
x

image courtesy: twitter/@TheHockeyIndia

இந்திய அணி இன்று நடைபெற்ற அரையிறுதியில் தென் கொரியாவுடன் மோதியது.

ஹூலுன்பியர்,

6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான் (8), சீனா (6), தென்கொரியா (6) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென் கொரியாவுடன் இன்று மோதியது. லீக் சுற்றில் ஏற்கனவே தென் கொரியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்கிய இந்திய அணி இதிலும் ஆதிக்கம் செலுத்தியது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், உத்தம் சிங் மற்றும் ஜர்மன்பிரீத் சிங் தலா 1 கோல் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story