ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது..!


ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது..!
x

image courtesy: AHF twitter via ANI

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று தொடங்கியது.

Asia Cup 2022: India concede late goal against arch-rivals Pakistan, match ends in 1-1 draw

ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது..!

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று தொடங்கியது.

Asian Cup Hockey, India, Pakistan, ஆசிய கோப்பை ஆக்கி, இந்தியா, பாகிஸ்தான்ஜகர்தா,

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா, 'பி' பிரிவில் மலேசியா, 4 முறை சாம்பியனான தென்கொரியா, ஓமன், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் முதல் நாளான இன்று 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் தொடக்க ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் செல்வம் கார்த்தி ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் இந்திய அணிக்காக தன்னுடைய முதல் சர்வதேச கோலை அடித்தார். மேலும் பாகிஸ்தான் அணி சார்பில் அப்துல் ரானா ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து புள்ளியை சமன் செய்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.


Next Story