ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ஒலிம்பிக் நட்சத்திரம்


ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு  தலைமை தாங்குகிறார் ஒலிம்பிக் நட்சத்திரம்
x
தினத்தந்தி 11 Nov 2021 3:22 PM IST (Updated: 11 Nov 2021 3:22 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா தனது முதல் போட்டியில் நவம்பர் 24 ஆம் தேதி பிரான்சு அணியை எதிர்கொள்கிறது

ஒடிசா,

12-வது ஜூனியர் உலக கோப்பை  ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில்  உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

இதில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக விவேக் சாகர் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று சாதனை படைத்தது.வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தவர்களில் 21 வயதான  விவேக் சாகர் பிரசாத்தும் ஒருவர் ஆவார். 

இந்தியா தனது முதல் போட்டியில்  நவம்பர் 24  ஆம் தேதி பிரான்சு அணியை எதிர்கொள்கிறது . இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி  நவம்பர் 25 அன்று கனடாவை எதிர்கொள்கிறது.இதைத் தொடர்ந்து இந்திய அணி நவம்பர் 27-ம் தேதி போலந்து அணியுடன் மோதுகிறது. 

இந்த உலக கோப்பையின்   நாக் அவுட் போட்டிகள் டிசம்பர் 1 முதல் 5 வரை தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story