உலகக் கோப்பை கால்பந்து பயிற்சி போட்டி: ஓமனை வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி


உலகக் கோப்பை கால்பந்து பயிற்சி போட்டி: ஓமனை வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி
x

Image Tweeted By DFB_Team_EN

ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மஸ்கட்,

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா.

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் சந்திக்கின்றன.

இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஓமனில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஜெர்மனி- ஓமன் அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் 2-வது பாதியில் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லஸ் அந்த அணியின் முதல் கோலை அடித்தார். இதை தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story