பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயின்...!


பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயின்...!
x
தினத்தந்தி 20 Aug 2023 5:37 PM IST (Updated: 20 Aug 2023 5:48 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - ஸ்பெயின் மோதின.

சிட்னி,

32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சுவீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் 29-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோலை அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஸ்பெயின் வீராங்கனை கார்மோனா இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் மேலும் கோல்கள் விழவில்லை.

இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பதில் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தது. ஆனால் பதில் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


Next Story