பெண்கள் கால்பந்து தரவரிசை பட்டியல்; 2-வது இடத்துக்கு முன்னேறிய ஸ்பெயின்...!


பெண்கள் கால்பந்து தரவரிசை பட்டியல்; 2-வது இடத்துக்கு முன்னேறிய ஸ்பெயின்...!
x

image tweeted by @FIFAWWC

பெண்கள் கால்பந்து அணிகள் தரவரிசை பட்டியலில் அமெரிக்கா 6 வருடங்களுக்கு பின் முதலிடத்தை இழந்துள்ளது.

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் பெண்கள் கால்பந்து அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியை சந்தித்த சுவீடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. இரு முறை சாம்பியனான அமெரிக்கா 6 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக முதலிடத்தை இழந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த அணி உலகக்கோப்பை தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவீடனிடம் தோல்வி அடைந்திருந்தது. இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்த ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து 4-வது இடத்தில் தொடர்கிறது.

பிரான்ஸ் அணி 5-வது இடத்தில் உள்ளது. லீக் சுற்றுடன் வெளியேறிய ஜெர்மனி 2-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஒலிம்பிக் சாம்பியனான கனடா 3 இடங்கள் பின்தங்கி 10-வது இடத்தை பிடித்துள்ளது. உலகக்கோப்பை தொடரை நடத்திய ஆஸ்திரேலியா 11-வது இடத்தில் உள்ளது.


Next Story