தமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த கால்பந்து வீராங்கனை விருது


தமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த கால்பந்து வீராங்கனை விருது
x

தமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த கால்பந்து வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு நடந்தது. இதில் 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது இந்துமதி கதிரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா எப்.சி. வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றிய அவர் 5 கோல் அடித்தார்.

கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். சிறந்த வீரர் விருதை மிசோரத்தை சேர்ந்த லாலியன்ஜூலா சாங்தே பெற்றார்.


Next Story