சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைந்தார் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மார்


சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைந்தார் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மார்
x

Image : @Alhilal_EN Tweet 

தினத்தந்தி 16 Aug 2023 9:26 AM GMT (Updated: 16 Aug 2023 9:35 AM GMT)

சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மார் இன்று கையெழுத்திட்டார்.

ரியாத்,

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கால்பந்து கிளப்புக்காக 6 ஆண்டுகள் விளையாடி வந்தார் இந்த நிலையில் அவரை தங்கள் கிளப்பில் இணைக்க சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் முயற்சி மேற்கொண்டது.

அவரை விற்க பி.எஸ்.ஜி. நிர்வாகமும் ஒப்புக்கொண்டது. இதே போல் நெய்மாரும் 2 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் அல்-ஹிலால் கிளப்பில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் நட்சத்திர வீரர் நெய்மார் இன்று கையெழுத்திட்டார்.

அல்-ஹிலால் கிளப் அவரை சுமார் 90 மில்லியன் யூரோவுக்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பிடமிருந்து வாங்கியிருக்கிறது. அல்-ஹிலால் கிளப்புக்காக 2 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் நெய்மார், ஆண்டுக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 1250 கோடி ரூபாய் ஊதியமாகப் பெறுவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, சவுதி கிளப் அணியான அல்-நசர் அணியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story