லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி : அரைஇறுதிக்குள் நுழைந்தது இன்டர் மியாமி அணி
சமீபத்தில் இன்டர் மியாமி கிளப்பில் இணைந்த லயோனஸ் மெஸ்சி 86-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
போர்ட் லாடர்டேல்,
கிளப் அணிகளுக்கான லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இன்டர் மியாமி கிளப் அணி, சார்லோட் கிளப்பை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் சார்லோட் கிளப்பை துவம்சம் செய்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
சமீபத்தில் இன்டர் மியாமி கிளப்பில் இணைந்த அரஜென்டினா அணியின் கேப்டன் லயோனஸ் மெஸ்சி 86-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இன்டர் மியாகி கிளப் அணிக்காக 5-வது ஆட்டத்தில் ஆடிய மெஸ்சி அடித்த 8-வது கோல் இதுவாகும். அவர் எல்லா ஆட்டங்களிலும் கோல் அடித்து அசத்தி உள்ளார். 15-ந் தேதி நடைபெறும் அரைஇறுதியில் இன்டர் மியாமி, பிலடெல்பியா அணியுடன் மோதுகிறது.
Related Tags :
Next Story