ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்..? - ஈஸ்ட் பெங்கால் அணியுடன் இன்று மோதல்..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்..? - ஈஸ்ட் பெங்கால் அணியுடன் இன்று மோதல்..!
x

image courtesy: @IndSuperLeague

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் பஞ்சாப் அணி உள்ளது.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

நடப்பு தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 டிரா, 3 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் ஆடி 4 டிரா, 4 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் பஞ்சாப் அணி உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.


Next Story