ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை- மோகன் பகான் ஆட்டம் 'டிரா'
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது
கொல்கத்தா,
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது.இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., ஈஸ்ட் பெங்கால், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா எப்.சி., பஞ்சாப் எப்.சி. மற்றும் புதிய வரவான முகமைதன் ஸ்போர்ட்டிங் கிளப் என 13 அணிகள் பங்கேற்கின்றன.
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. முதல் நிமிடம் முதல் கடைசி வரை பரபரப்பாக நகர்ந்த இந்த மோதல் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இன்றைய ஆட்டங்களில் ஒடிசா- சென்னையின் எப்.சி. (மாலை 5 மணி), பெங்களூரு- ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.