ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்-மோகன் பகான் அணிகள் மோதின.
ஜாம்ஷெட்பூர் ,
12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்-மோகன் பகான் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் முகமது ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஸ்டீவ் ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மோகன் பகான் அணி சார்பில் அர்மண்டோ ஆட்டத்தின் 29-வது நிமிடத்திலும் லிஸ்டன் 48-வது நிமிடத்திலும் கியான் 80-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மோகன்பகான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story