ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி
இன்று ஜார்கண்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - மும்பை அணிகள் மோதின.
ராஞ்சி,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று மாலை ஜார்கண்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - மும்பை அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜாம்ஷெட்பூர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜாம்ஷெட்பூர் அணியில் ஜோர்டான் முர்ரே ஒரு கோலும், ஜாவி ஹெர்னாண்டஸ் 2 கோல் அடித்தார். மும்பை அணியில் நிகோஸ், வான் நெயிப் ஆகியோர் கோல் அடித்தனர்.
இரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோவா - முகமைதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என டிரா ஆனது
Related Tags :
Next Story