ஐ.எஸ்.எல். கால்பந்து: ஆறுதல் வெற்றிபெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஆறுதல் வெற்றிபெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி
x

கோப்புப்படம் 

மும்பை அணி ஏற்கனவே அரைஇறுதியை எட்டியதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து அதற்குரிய கோப்பையை பெற்றது.

மும்பை,

11 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த மும்பை சிட்டிக்கு அதிர்ச்சி அளித்தது. வெற்றிக்குரிய கோலை பெங்கால் அணி வீரர் நாரெம் மகேஷ் சிங் 52-வது நிமிடத்தில் அடித்தார்.

என்றாலும் மும்பை அணி 14 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி என்று 46 புள்ளிகளுடன் ஏற்கனவே அரைஇறுதியை எட்டியதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து அதற்குரிய கோப்பையை பெற்றது.

அதே சமயம் 19-வது ஆட்டத்தில் ஆடி 6-வது வெற்றியை பெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி, பிளே-ஆப் வாய்ப்பை இழந்து விட்டதால் இது அவர்களுக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது.


Next Story