ஐ.எஸ்.எல் கால்பந்து: 5 வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்த ஈஸ்ட் பெங்கால் அணி


ஐ.எஸ்.எல் கால்பந்து: 5 வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்த ஈஸ்ட் பெங்கால் அணி
x

Image Tweeted By @IvanGGonzalezz

ஈஸ்ட் பெங்கால் அணி 5 வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஈஸ்ட் பெங்கால் அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் அந்த அணி 5 வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. சரலம்போஸ் கிரியாகோ (சைப்ரஸ்), இவான் கோன்சாலேஸ் (ஸ்பெயின்), அலெக்ஸ் லிமா (பிரேசில்), கிளீடன் சில்வா (பிரேசில்) மற்றும் எலியாண்ட்ரோ (பிரேசில்) ஆகிய வீரர்களை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

மற்ற அணிகள் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்து வந்த நிலையில் ஈஸ்ட் பெங்கால் அணி ஒரே நேரத்தில் 5 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.


Next Story