'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர்; இந்தியா - சிரியா அணிகள் இன்று மோதல்


இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடர்; இந்தியா - சிரியா அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @IndianFootball

இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

கச்சிபவுலி,

இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மொரீசியஸ், சிரியா அணிகள் கலந்து கொண்டு ஆடி வருகின்றன. இதில் இந்திய அணி, மொரீசியசுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 0-0 என (செப்டம்பர் 3) டிரா கண்டது.

அடுத்து மொரீசியஸ் - சிரியா அணிகளுக்கு இடையிலான 2வது லீக் ஆட்டத்தில் சிரியா 2-0 என்ற கோல் கணக்கில் மொரீசியஸை வீழ்த்தியது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா - சிரியா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story