இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மரணம்..!


இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மரணம்..!
x

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மரணம் அடைந்தார்.

கொல்கத்தா,

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் முன்கள வீரரான துளசிதாஸ் பலராம் (வயது 86) மேற்கு வங்காளத்தில் உள்ள உத்தர்பாரா நகரில் வசித்து வந்தார். சிறுநீரக தொற்று காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட துளசிதாஸ் பலராம் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான துளசிதாஸ் பலராம் 1962-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பக்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்று இருந்தார். அத்துடன் 1956, 1960-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி மற்றும் 1958-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளார். இந்திய அணிக்காக 36 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 10 கோல்கள் அடித்துள்ளார். சந்தோஷ் கோப்பை கால்பந்தில் ஐதராபாத் மற்றும் பெங்கால் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

உடல் நலப்பிரச்சினை காரணமாக தனது 27 வயதிலேயே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். ஆந்திராவில் பிறந்தவரான துளசிதாஸ் பலராமின் பெற்றோர் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story