பிபா தலைவராக கியானி இன்பான்டினோ போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு


பிபா தலைவராக கியானி இன்பான்டினோ போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு
x

Image Courtacy: AFP

பிபா தலைவராக கியானி இன்பான்டினோ போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

தோகா,

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவராக கியானி இன்பான்டினோ (சுவிட்சர்லாந்து) 2016-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்பான்டினோ போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு செய்யப்படுகிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியில் இல்லை என்று பிபா தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான பிபாவின் அறிக்கையில், " மார்ச் 16 அன்று ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் 73 வது பிபா (FIFA) தேர்தல் நடக்கும்போது இன்பான்டினோ மட்டுமே வேட்பாளராக இருப்பார் என்றும் வேறு எந்த வேட்புமனுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story