ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: சுலோவாக்கியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற உக்ரைன்


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: சுலோவாக்கியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற உக்ரைன்
x

Image Courtesy: AFP

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

டசல்டார்ப்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட' சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று மாலை டசல்டார்ப்பில் நடைபெற்ற ஆட்டத்தில் உக்ரைன் - சுலோவாக்கியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் செட் முடிவில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் சுலோவாக்கியா அணி முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் அபாரமாக செயல்பட்ட உக்ரைன் அணி 2 கோல்களை அடித்து அசத்தியது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியா அணியை வீழ்த்தி உக்ரைன் வெற்றி பெற்றது.


Next Story