ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்; அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இத்தாலி


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்; அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இத்தாலி
x

Image Courtesy: AFP

இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அல்பேனியா முதல் கோலை அடித்து 1-0 என முன்னிலை பெற்றது.

டார்ட்மண்ட்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்2 அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடரில் குரூப் பி-யில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இத்தாலி அணி அல்பேனியாவை சந்தித்தது. இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அல்பேனியா முதல் கோலை அடித்து 1-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி அணி ஆட்டத்தின் 11 மற்றும் 16வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. இறுதியில் முதல் பாதி ஆட்டத்தில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story