ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: குரோஷியா - அல்பேனியா ஆட்டம் 'டிரா'


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: குரோஷியா - அல்பேனியா ஆட்டம் டிரா
x

Image : UEFA EURO 2024

இன்று ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா - அல்பேனியா அணிகள் மோதின.

ஹாம்பர்க்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட' சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குரோஷியா - அல்பேனியா அணிகள் மோதின.

தொடக்கம் முதல் அல்பேனியா அணிஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கோல் அடித்த அல்பேனியா முதல் பாதி முடிவில் 1-0என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2வது பாதியில் ஆட்டத்தின் 74வது நிமிடத்திலும் , 76வது நிமிடத்திலும் கோல் அடித்து குரோஷியா அணி 2-1 என முன்னிலை பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 90வது நிமிடத்தில் அல்பேனியா அணி கோல் அடித்தது.இதனால் ஆட்டம் 2-2 என 'டிரா' வில் முடிந்தது.


Next Story